Sunday, December 13, 2009

மாமல்லன்

சங்கம் வைத்து தமிழ்
வளர்த்தந்த பாண்டியநாடு!
சுங்கம் தவிர்த்து உணவு
கொடுத்ததெங்கள் சோழநாடு!
பல்லவா நீயும் தமிழனென்பதை
சற்று கர்வத்துடன் கூறுவதுண்டு!
பஞ்சரதமதில் உந்தன்
நெஞ்சம் தெரியுதடா!
கடற்க்கரை கோவிலில் உன்
கவிதை புரியுதடா!
கற்ச்சிலையென்றாலும் நங்கையென்று-மனம்
கட்டியணைக்க சொல்கிறதே!
உச்சிவெயிளிலும் அதன்
உச்சிமுகர தோன்றுதடா!
பல்லவன் காதலை பார்க்கையில்
நமக்கும் காதல் பிறக்கும்!
உண்மைதான்!
கலையின்மீது!
சிற்பக்கலையின்மீது
நமக்கும் காதல் பிறக்கும்!